சந்தக்கடை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
கூடலுார்: மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மேல் கூடலுார் அருள்மிகு விநாயகர் மற்றும் அருள்மிகு சந்தக்கடை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, 10 தேதி காலை, 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 18ம் தேதி வரை தினமும சிறப்பு பூஜைகள், 19ம் தேதி காலை நடுகூடலுார் விநாயகர் கோவிலில் துவங்கிய பால் குடம் ஊர்வலம் கோவிலில் நிறைவு பெற்றது. நேற்று இரவு, தேர் ஊர்வலம் துவங்கியது. தேரில், சந்தக்டை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஊர்வலம் விநாயகர் கோவில், ஸ்ரீ சக்தி முனீஸ்வரன் கோவில், எஸ்.எஸ்., நகர் அருள்மிகு சத்திய நாகராஜா கோவில் சென்று, கோவிலில் நிறைவு பெற்றது. நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. 23ம் தேதி காலை முதல் சிறப்பு பூஜைகளும் மாலை, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மனை வழி அனுப்புதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.