உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி உற்சவம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி உற்சவம்

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று செவ்வாய்கிழமை ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி உற்சவம் காலை 9.00 மணிக்கு  கோயில் வளாகத்தில் உள்ள கலாஆராதன மேடையில் ஆதிசங்கரரின் திருவுருவப் படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து மகா தீபாராதனை  மற்றும் தூபம் நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த  நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் பி.கே.வெங்கடேசுலு, அறங்காவலர் குழு உறுப்பினர் குர்ரப்ப செட்டி, கோயில் தலைமை அர்ச்சகர் கருணாகர் குருக்கள் கோவில் துணை செயல் அதிகாரி வித்யாசாகர் ரெட்டி, மேற்பார்வையாளர்கள் நாகபூஷணம், கிருஷ்ணா ரெட்டி துப்புரவு ஆய்வாளர், வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் அர்த்தகிரி பிரசாத்,.பிரதீப் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இதே போல் ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள பானகல் பகுதியில் வீற்றிருக்கும் செல்லேஸ்வர சுவாமி கோயிலில் இன்று ஆதிசங்கரரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியார் திருவுருவச் சிலைக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சிறப்பு அபிஷேக ( பால், தயிர், சந்தனம் , தேன், விபூதி மற்றும் இளநீரால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதி சங்கராச்சாரியாரை வழிப் பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !