கூவம் திரபுராந்தக சுவாமி கோவிலில் சித்திரை விழா கொடியேற்றம்
கூவம்: கூவம் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில் இன்று சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், ஹிந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நடப்பாண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலை 7:00 மணி, மாலை 6:00 மணி – இரவு 8:00 மணி வரை பல்வேறு வாகனங்களில் சோமாஸ்கந்தர் வீதியுலா எழுந்தருள்வார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 27ம் தேதி காலை 9:00 மணிக்கு நடைபெறும். மே 4ம் தேதி பஞ்சமூர்த்தி அபிஷேகம் மற்றும் பஞ்சமூர்த்தி ரிஷப வாகன சேவையுடன், சித்திரை திருவிழா நிறைவுபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.