உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரங்கபாணி ஸ்வாமி கோவிலில்அறநிலையத்துறை கமிஷனர் ஆய்வு!

சாரங்கபாணி ஸ்வாமி கோவிலில்அறநிலையத்துறை கமிஷனர் ஆய்வு!

கும்பகோணம்: மகாமக திருவிழாவையொட்டி, கும்பகோணம் கோவில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளை, அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி நேற்று ஆய்வு செய்தார்.

பிரசித்தி பெற்ற, 108 வைணவத் தலங்களில் மூன்றாவது தலமாக கருதப்படும், கும்பகோணம்சாரங்கபாணி ஸ்வாமி கோவிலில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்த திருப் பணி முடிவுற்று வரும் ஜூலை, 13ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.இந்த கோவிலுக்கு சென்ற அறலையத்துறை கமிஷனர் ரசண்முகமணி ராஜகோபுரப்பணிகள், விமானப்பணிகள், உள்ள அனைத்து திருப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, திருப்பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.முன்னதாக கோவிலுக்கு வந்த அவரை, நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி உள்ளிட்டோர் வரவேற்றனர்.ஆய்வின் போது கூடுதல் கமிஷனர் கவிதா, இணை கமிஷனர் ஜெகன்நாதன், துணை கமிஷனர்கள்அசோக்குமார், விஜயேந்திரன், உதவி கமிஷனர்கள் மாரியப்பன், ஞானசேகரன் மற்றும் பலர் உடன் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !