உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் ஒளிரப்போகுது கிரிவலப்பாதை!

திருப்பரங்குன்றம் ஒளிரப்போகுது கிரிவலப்பாதை!

மதுரை: திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் ரூ.ஒரு கோடியில் மின்விளக்குகள் அமைக்க
சுற்றுலாத்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பக்தர்கள் இரவு நேரத்திலும் கிரிவலப்பாதையை பயன்படுத்தும் வகையில் குறுகிய
இடைவெளிகளில் மின்கம்பங்கள் அமைத்து அழகுபடுத்தும் பணிகள் விரைவில் துவங்க
உள்ளன. இதற்கான நிதியை சுற்றுலாத்துறை மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளது. 5 கி.மீ.,
தூரத்தில் எந்த பகுதிகளில் மின்விளக்குகள் அமைப்பது என்பது குறித்து பொறியாளர்கள்
முதற்கட்ட ஆய்வுகள் நடத்தியுள்ளனர். இப்பணிகளின் போது கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !