உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் அம்மையார் கோவிலில்ஜூலை 1ம் தேதி மாங்கனி திருவிழா!

காரைக்கால் அம்மையார் கோவிலில்ஜூலை 1ம் தேதி மாங்கனி திருவிழா!

காரைக்கால்: காரைக்காலில் உள்ள, அம்மையார் கோவிலில் வரும் 1ம் தேதி மாங்கனி திருவிழா நடக்கிறது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு, காரைக்காலில் கோவில் உள்ளது. இக்கோவிலில், பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா, கடந்த 7ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது.வரும் 29ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 30ம் தேதி காரைக்கால்
அம்மையார் - பரமதத்த செட்டியார் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

முக்கிய உற்சவமான, மாங்கனி திருவிழா, ஜூலை 1ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம்
சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா வரும்போது, பக்தர்கள் மாங்கனி வீசும் வைபவம் நடக்கிறது. அன்று மாலை, அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !