துவரிமான் கோயில் வருஷாபிஷேகம்!
ADDED :3767 days ago
மதுரை: மதுரை துவரிமான் மீனாட்சி கோயிலின் 12வது வருஷாபிஷேக விழா ஜூன் 24ல்
நடக்கிறது.700 ஆண்டுக்கு முன் உக்கிரம பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோயில்
சிதலமடைந்தது. 80 ஆண்டுகளாக பூஜையின்றி கிடந்த இங்கு, திருப்பணி நடத்தப்பட்டு 2003
ஜூலை 6ல் கும்பாபிஷேகம் நடந்தது.
வருஷாபிஷேக விழாவில், காலை 7.00 மணிக்கு யாகசாலை பூஜையும், அம்மனுக்கு வெள்ளிக் கவசம் சாத்துபடியும் நடக்கும். ஏற்பாடுகளை தலைவர் கருமுத்து கண்ணன், ஹரி தியாகராஜன், வெங்கட்ராமன் செய்துள்ளனர்.