பிரளயகாலேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை!
ADDED :3763 days ago
பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நடந்த மாணிக்கவாசகர் குரு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது. அதையொட்டி, காலை 8:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஏராளமான சிவனடியார்கள் திருவாசகம் படித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.