கைலாயநாதர் கோவிலில் உலக நன்மைக்காக ருத்ரயாகம்
ADDED :3762 days ago
திருவண்ணாமலை: ஆரணி கோட்டை பகுதியில், அறம்வளர் நாயகி கைலாயநாதர் கோவிலில், உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை, 5 மணி அளவில், ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 7 மணி முதல், யாகசாலை அமைக்கப்பட்டு புனித நீர் கலசங்கள் வைத்து, ருத்ரயாகம் நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார், 1,331 முறை ருத்ரபாராயணம் செய்தனர். பின்னர் யாக பூஜையில் வைக்கப்பட்ட புனித நீரை எடுத்து சென்று, ஸ்வாமிகளுக்கு கலசாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.