முறையூர் மீனாட்சி-சொக்கநாதர் கோயிலில் ஆனித் திருவிழா
ADDED :3761 days ago
சிங்கம்புணரி: முறையூர் மீனாட்சி-சொக்கநாதர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.மூலவர் சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜையுடன்,கம்பத்தில் கொடிவளைதல், காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினமும் பஞ்ச மூர்த்திகள் உபயதாரர் மண்டகப்படியில் எழுந்தருள் கின்றனர். பகல், இரவு சுவாமி புறப்பாடு, கலை, இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஜூன் 29ல் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம்,30ல் தேரோட்டம். ஜூலை 1ல் பத்தாம் திருநாள்சுவாமி மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது.சிவகங்கை தேவஸ்தானம்,முறையூர் கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.