உலக மீட்பர் ஆலய நவநாள் திருவிழா
ADDED :3840 days ago
தேவகோட்டை:தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலய நவநாள் திருவிழா பாதிரியார் அந்தோணி மைக்கேல் கொடியேற்றி வைக்க திருவிழா தொடங்கியது.தினமும் மாலை நவநாள் சிறப்பு திருப்பலி நடந்தது. இறுதி நாளில் சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் பாதிரியார் மிக்கேல்ராஜ் தலைமையில், பாதிரியார் சந்தியாகு,வட்டார அதிபர் பாதிரியார் பாஸ்டின், ராம்நகர் புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் சேசுராஜா உட்பட பகுதி பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டு திருப்பலி நடந்தது. இதனை தொடர்ந்து அலங்காரரதத்தில் உலகமீட்பர் தேர்பவனி வலம் வந்தது.