மாணிக்க வாசகருக்கு குருபூஜை விழா!
சிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெருவில் அமைந்துள்ள மாணிக்க வாசகர் பெருமானுக்கு குரு பூஜை விழா சிறப்பாக நடந்தது. சிதம்பரம் வே ங்கான் தெருவில் மாணிக்க வாசக பெருமான் சாபித்து பூஜித்த ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்மாநாதர் கோவில் உள்ளது. மாணிக்கவாசக பெரு மாள் திருவாசகத்தை சொல்ல, அதனை ஸ்ரீ நடராஜ பெருமான் தன் கைப்பட எழுதியாக கூறப்படுகிறது. அச்சிறப்பு வாய்ந்த கோவிலில் நேற்று மாணிக்க வாசகருக்கு குருபூஜை விழா நடந்தது. காலை சிவ பூஜை மற்றும் ஹோமங்கள் நடந்தது. நுõற்றுக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்று திருவாசக முற்றோதல் செய்தனர். பகல் 1 மணிக்கு மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சேது சுப்ரமணியன் பஞ்சபுராணம் வாசித்தார். பின்னர் மகா தீபாராதனை நடந்தது. குரு பூஜை ஏற்பாடுகளை ஆத்மநாதர் கோவில் டிரஸ்டி பசவராஜ் தலைமையில் சிவனடியார்கள் செய்திருந்தனர்.