இடப தரிசனத்தின் சிறப்புக்கள்!
ADDED :3861 days ago
நினதுதெரி சனமுடிவில் நால்வேத பாதமாய்
நிலவுமொழி மெய் தருமமாய்
நீடுபரை வதனமாய் நாதஞ்சி ருங்கமாய்
நீள்வி ழிகளே விந்துவாய்
கனகுடிலை கன்னமாய்ப் பாவனைய(து) அண்டமாய்க்
கதிர்வால்தி ரோதைவ டிவாய்க்
கருதுவிடை அடிதொழுது துதிகள்செய் தலரினைக்
கைகளால் தூவி யந்தப்
புனைவிடையின் இருகொம்பின் நடுவினில் ஓங்காரம்
புகன்றரவோம் அரக ரவெனப்
போற்றியுனை வாயிலின் இருந்து தெரிசித்தலே
பொருந்தமுறை யென்று ரைத்தாய்
சினவிடையின் மீதெழுந்து அமரர்முனி வர்க்கும்
சிறந்த வரம்அருள் நம்பனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.