விபூதி தரிக்கும் விதிகள்!
ADDED :3782 days ago
சுருதிபுகழ் பூதிதனை அங்குட்ட விரலினால்
தொட்டுதவ அணியின் வெந்நோய்
சூழ்ந்திடும் தர்ச்சனியி னால்ஈதல் மரணமே
சொல்லுநடு அஞ்கு லிதனால்
தருதல்புத் திரநாச மேசிறிய அஞ்குலி
தன்னி லேபெருந் தோடமாம்
சாற்றிய அநாமிகை யொடங்குட்டம் எய்திடத்
தான்தெய்வ சன்னி தியினும்
குருமுகத் தினும் உதவு வெண்ணீறு பூசிடின்
கோலமுறு மெய்யு ரோமக்
குறியெலாம் வெவ்வேறு இலிங்கவடி வாம்என்று
குறைவிலா கமம்உ ரைத்தாய்
சிரகரம் உரங்கண்ட மதில்அக்க மாலைபுனை
தில்லையந் தணர்கள் வாழும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.