உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உருத்திராக்கத்தின் வடிவம்!

உருத்திராக்கத்தின் வடிவம்!

அக்கமணி யொருமுகம் சிவமிரண்டு மைமூன்ற(து)
அங்கிநால் வதனம றையோன்
ஐந்துருத் திரன்ஆறு முருகவேள் சேடன்ஏழ்
ஐங்கரக் கடவுள் எட்டாம்
தக்கவொன் பதுவடுகன் அரிபத்து வதனமாம்
சாற்றுபதி னொருமு கந்தான்
சதுமறைசொல் பதினோரு ருத்திரர்கள் பனிரெண்டு
தானிர விபதின் மூன்றுசேய்
மிக்கபதி னான்கது சிவம்சத்தி பதினைந்து
மேவுமுகம் விந்து நாதம்
வினவுமுச் சியிலொன்று நாலொன்ப தாம்சிரம்
வியன்க ழுத்தெண் ணான்கதாம்
செக்கர்மணி பதினாறு கைக்குமார் பைம்பது
செவிக்காற தெனவு ரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !