குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை துவக்கம்!
ADDED :3756 days ago
நீடாமங்கலம்: அடுத்த மாதம், 5ம் தேதி, குரு பகவான், கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு
பெயர்ச்சி அடைகிறார். இதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், கடந்த சில நாட்களாக, முதற்கட்ட லட்சார்ச்சனை
நடந்து வருகிறது. குரு பெயர்ச்சிக்கு பின், ஜூலை 9 முதல், 15ம் தேதி வரை, இரண்டாம் கட்ட
லட்சார்ச்சனை நடக்கிறது.