உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசங்கள் பொருத்தும் பணி

அழகர்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசங்கள் பொருத்தும் பணி

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் சன்னதி தங்க விமானத்தில் கலசங்கள் பொருத்தும் பணி நடந்தது.

கும்பாபிஷேத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை எஸ்.பி.ஆஸ்ரா கார்க் பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது: கும்பாபிஷேகம் நடைபெறும் ஞாயிறு, காலை 6 மணி முதல், கோயில் அருகில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் ஒரு கி.மீ., முன் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நிறுத்தப்படும். மேலூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், தனியார் ரியல் எஸ்டேட் பகுதியில் நிறுத்தப்படும். வி.ஐ.பி., வாகனங்கள் மட்டும் கோயில் அருகில் செல்ல அனுமதி உண்டு. எட்டு டி.எஸ்.பி.,க்கள், 25 இன்ஸ்பெக்டர், 100 எஸ்.ஐ.,க்கள் மற்றும் 500 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள், என்றார்.கும்பாபிஷேகம் அன்று கோயில் கோட்டை சுவர் உட்பகுதியில் ஆடு, கோழி வெட்டுவதற்கும், சமைப்பதற்கும் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !