பழநிகோயில் கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
ADDED :3758 days ago
பழநி:பழநி மலைக்கோயில் கிரிவீதி, பாதவிநாயகர்கோயில் அருகே பக்தர்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பழநி மேற்கு, வடக்கு கிரிவீதிகளில் வின்ச் ஸ்டேஷன், பாதவிநாயகர் கோயில் அருகே தேங்காய் பழக்கடை, பேன்சி பொருட்கள் என பக்தர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள், தட்டுகடைகள் வைக்கப் படுகிறது.இதுகுறித்த புகாரில்பழநிகோயில் இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம் தலைமையிலான கோயில் அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர் மகேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் கிரிவீதிகள், ஆண்டவன் பூங்காரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை, கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருட்களை பறிமுதல் செய்தனர். அடிவாரம் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.