திருப்பூர் ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டா தின விழா!
ADDED :3758 days ago
திருப்பூர்: திருப்பூர் ஐயப்பன் கோவிலில், மூன்றாம் ஆண்டு பிரதிஷ்டா தின விழா, நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு, மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, நம்பூதிரிகள் வேத மந்திரங்கள் முழங்க, 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடத்தினர். சுவாமிக்கு, திரவிய அபிஷேகம், சந்தன அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்தில், ஐயப்பன் அருள்பாலித்தார். தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.