உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி அம்மன் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் தேவை?

பவானி அம்மன் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் தேவை?

நன்மங்கலம்: கோவில் குளத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலம்பாக்கம், நன்மங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே, பவானி அம்மன் கோவில் குளம் உள்ளது. வேலி, தடுப்பு சுவர் கிடையாது. இதனால், கோவில் குளத்தில் குப்பை போடப்படுகிறது. சில நாட்களுக்கு முன், கோவில் குளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலியானார். கோவில் குளத்தை பாதுகாக்கும் பொருட்டு, சுற்றுச்சுவர் அமைக்க வேண் டும் என, பகுதிவாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோவில் குளத்தில் சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !