உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா!
ADDED :3758 days ago
கீழக்கரை: உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனிமாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தில் உற்சவ நடராஜருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, மரகத நடராஜர் சன்னதியில் உள்ள உற்சவ நடராஜருக்கு 21 வகையான சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தாழம்பு சாத்தப்பட்டு, தாமரை மலர் அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், உள் பிரகார வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.