வரசித்தி விநாயகர் கோயிலில் அன்னதானம்!
ADDED :3758 days ago
மதுரை: மதுரை கூடல்நகர் அசோக்நகர் முதல் வீதி வரசித்தி விநாயகர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் நேற்று நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 10.30 மணிக்கு வஸோர்த்தாரா ஹோமம், பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பாஸ்கர வாத்தியார் செய்திருந்தார்.