உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜூலை 5ல் குரு பெயர்ச்சி: முருகன் கோவிலில் பூஜை

ஜூலை 5ல் குரு பெயர்ச்சி: முருகன் கோவிலில் பூஜை

மோகனூர்:வரும், ஜூலை, 5ம் தேதி, மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடக்கிறது.மோகனூரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் உள்ளது. இக் கோவிலில், ஆண்டு தோறும், குரு பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு குரு பெயர்ச்சி விழா, வரும், ஜூலை, 5ம் தேதி நடக்கிறது. அன்று, இரவு, 10.55 மணிக்கு, கடக ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கு, பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு, காந்தமலை பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், சிறப்பு யாக வேள்விகளும், அபிஷேகம் ஆராதனையும் நடக்கிறது.இந்த குரு பெயர்ச்சியில், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டால், நன்மை பயக்கும். அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !