உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரியூர் மற்றும் பச்சமலையில் ஆனி திருமஞ்சனம் உற்சவம்

பாரியூர் மற்றும் பச்சமலையில் ஆனி திருமஞ்சனம் உற்சவம்

கோபி:கோபி, பச்சமலையில் எழுந்தருளி உள்ள சிவகாமி அம்பாள் சமேத நடராஜ சுவாமிக்கு, ஆனி திருமஞ்சன அபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது.காலை, 8 முதல், 11 மணி வரை மகா ஹோமம், 12 மணிக்கு, 108 சங்காபிஷேகம், 12.30 மணிக்கு மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.இதேபோல், பாரியூர் கொண்டத்து காளியம்மன் வகையறா, அமரபணீஸ்வரர் கோவிலில், காலை, 7 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் உற்சவமூர்த்திக்கு மகன்யாச அபிஷேகம் நடந்தது. காலை, 8 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !