உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் திறப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் திறப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள உண்டியல்கள், நேற்று திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு, வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் ஸ்வாமி தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். மாதந்தோறும் இறுதி வாரத்தில், கோவிலின் உண்டியல் திறந்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்படும். நேற்று காலை, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் முன்னிலையில், கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 37 லட்சத்து, 87 ஆயிரத்து, 868 ரூபாய் ரொக்கம், 297 கிராம் தங்கம், 855 கிராம் வெள்ளி, மற்றும், 315 வெளிநாட்டு கரன்ஸிகளை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !