உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவான் யோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் 11ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா

பகவான் யோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் 11ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா

திருக்கோவிலுார் : திருவண்ணாமலை பகவான் யோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தின் மகா கும்பாபிஷேக பதினொன்றாம் ஆண்டு நிறைவு விழா இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று ௨௫ம் தேதி காலை 6:30 மணிக்கு அதிஷ்டானத்தில் அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. 10:45 மணிக்கு யோகிராம்சுரத்குமார் மகராஜ் சுவாமிகளுடன் ஏற்பட்ட அனுபவங்களை, பக்தர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.மாலை 4:30 மணிக்கு மயிலை சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், 6:15 மணிக்கு சட்டநாத பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. நாளை ௨௬ம் தேதி காலை 7:00 மணிக்கு அதிஷ்டானத்தில் மூலவருக்கு மகா அபிஷேகம், 10:30 மணிக்கு பக்தர்கள் பஜனை, 11:00 மணிக்கு சோடசோபவுபசார தீபாராதனை நடக்கிறது.மாலை 4:00 மணிக்கு துருவ நாராயணன் பாடல்கள், 5:45 மணிக்கு பகவானின் சரித்திர புத்தகங்களான திவ்ய பிட்சு, ப்ரேம்தரங் ஆகியவை இந்தி மொழியில் வெளியீட்டு விழா, 6:15 மணிக்கு மாதவப்பெட்டி மூர்த்தி மாணவர்களின் குச்சிப்புடி நடனம், இரவு 8:00 மணிக்கு பகவான் வெள்ளி ரதத்தில் பவனி, ஆரத்தி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !