உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பட்டியில் வருஷாபிஷேக விழா

மேட்டுப்பட்டியில் வருஷாபிஷேக விழா

சேத்தூர்:சேத்தூர் - மேட்டுப்பட்டி சக்கிவிநாயகர்,மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேக விழா நடந்தது. முதல்நாள் அம்மனுக்கு பல்வேறு யாகங்கள் நடந்தது. இரண்டாம் நாளில் சக்தி விநாயகர்,மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மணிமுத்து செல்வ சிவாச்சாரியார் கோபுர கலசங்களுக்கு மஹா அபிஷேகம் செய்து வைத்தார். மாலையில் காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம்,முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனர்.நேற்று காலை பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடை நிர்வாக குழுவினர் மற்றும் சமுக நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !