கொழுமம் தாண்டேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
ADDED :5238 days ago
உடுமலை : கொழுமம் தாண்டேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் இன்று நடக்கிறது.உடுமலை கொழுமம் தாண்டேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி மாத வளர்பிறை சதுர்த்தி நாட்களில் ஆறுவகை அபிஷேகங்கள் நடக்கிறது. அதன்படி, ஆனி திருமஞ்சனத்தையொட்டி, இன்று(7ம் தேதி) காலை 11.00 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் நடராஜர் தரிசனம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.