400 ஆண்டு பழமையான ஜெயவீர ஆஞ்சநேயர்!
ADDED :3888 days ago
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ., துõரத்திலுள்ள கிராமம் ஆவூர். இங்குள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் பழமை மிக்கது. இங்கு உற்சவராக வரதராஜப் பெருமாள் வீற்றிருக்கிறார். இங்குள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் விக்ரகம், 400 ஆண்டுகள் பழமையானது. வியாசராஜ சுவாமிகள் இதை பிரதிஷ்டை செய்துள்ளார். விரும்பிய வரங்களைப் பெறுவதற்கு இவரை வழிபடுகின்றனர். நாலரை அடி உயரத்தில், வாலில் மணி கட்டிய கோலத்தில், தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்தக் கோவிலில், 1969ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், தற்போது திருப்பணி நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் 98416 23014 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.