செப மாலையின் பயன்!
ADDED :4123 days ago
முத்திதரும் ஐயைந்து மணியக்க மாலைகொடு
முறையிற்செ பங்கள் புரியின்
மொழியிருப தாறது சிவார்த்தமத னிற்பாதி
மூசுசத் துருவி னாசம்
ஒத்தஇரு பானேழு செல்வம்இரு பதினெட்டது
ஓங்குமெய்த் திடமூன் றுபத்து
உயர்புண்ணி யங்கள்மிகும் ஆபிசா ரந்தனக்கு
உற்றப தினைந் தாகுமால்
அத்தகைய மணிதனைக் காணவே பாவமறும்
அதிகசித் திகளு றுமுடற்(கு)
அதுபரிச முறினளவில் புண்ணியம் பூணவென்று
அளவிலா கமம் உ ரைத்தாய்
சித்தமகிழ் நடனம் புரிந்துயிர்க் களவிலாச்
செல்வமொடு முத்தி யருளும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.