ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிறைவு விழா
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஸ்ரீராமர் கோவிலில் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வில்வராண்ய சேத்திரம் எனப்படும் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஸ்ரீராமர், சீதா, லெட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீராமபிரானுக்கு கோவில் கட்டப்பட் டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் கட்டப்பட்டு மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, காலையில் 17 கலசங்களில் புனித நீர் வைக்கப்பட்ட சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீராமர், சீதை, லெட்சுமணருக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வெண்னை காப்பு சாத்தப்பட்டு தீபாரதனை நடந்தது. மாலையில் சீதா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. ஸ்வாமி வீதியுலா வ ந்து பக்தர்களுக்கு காட்யளித்தார். இதற்கான ஏற்பாடுகளை விழா உப தலைவர் கருணாநிதி, செயலாளர் பெருமாள், துணை தலைவர்கள் முருகதாஸ், ராமகிருஷ்ணன், துணை செயலாளர்கள் விஸ்நாதன், கார்த்திக், பொருளாளர் வெங்கடகிருஷ்ணன், மற்றும் பொ றுப்பாளர்கள் செய்திருந்தனர்.