உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் செப்பு தேரோட்டம்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் செப்பு தேரோட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடந்தது. விழா கடந்த 18 ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகின்றன. 9ம் விழாவான நேற்று காலை 8 மணிக்கு செப்பு தேரோட்டம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் செயல்  அலுவலர் ராமராஜா, டி.எஸ்.பி., முரளிதரன், வாசுதேவன் பட்டர், அனந்தராமன் பட்டர் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !