உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அங்காளம்மன் அருள்பாலிப்பு!

அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அங்காளம்மன் அருள்பாலிப்பு!

விருத்தாசலம்:  ஆனி இரண்டாம் வெள்ளியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் சந்தைதோப்பு அ  ங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை சித்தி விநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மன், புற்று மாரியம்மன்   சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அ  ருள்பாலித்தார். அதேபோல், விருத்தகிரீஸ்வரர் கோவிலில், பாலாம்பிகை, விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரத்தில்   தீபாராதனை நடந்தது. தென் கோட்டை வீதி மோகாம்பரி அம்மன், ஜங்ஷன் சாலை ஜெகமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமா÷  னார் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !