உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கநாதர் ராஜகோபுர கலசம் நிதி திரட்டும் அறநிலைய துறை!

ஸ்ரீரங்கநாதர் ராஜகோபுர கலசம் நிதி திரட்டும் அறநிலைய துறை!

பெங்களூரு: ஸ்ரீரங்கப்பட்டணா ஸ்ரீரங்கநாதர் கோவில் கருவூலத்தில், கோடிக்கணக்கான ரூபாய் இருந்தும், ராஜகோபுர கலசத்திற்காக அறநிலையத் துறை, பக்தர்களிடம் நிதியுதவி கேட்டுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற, ஆன்மிக தலமான, ஸ்ரீரங்கப்பட்டணா ஸ்ரீரங்கநாதர் கோவிலின் ராஜகோபுர கலசம், 2013 மார்ச் 1ம் தேதி உடைந்து விழுந்தது. இரண்டரை ஆண்டுகளாக நீண்ட துாக்கத்திலிருந்து விழித்த அதிகாரிகள், கலசத்தை பிரதிஷ்டை செய்ய பக்தர்களிடம், டொனேஷன் வசூலிக்க தீர்மானித்துள்ளனர். ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் கருவூலத்தில், 7.60 கோடி ரூபாய் உள்ளது. இருப்பினும், கோவில் பணிக்கு நிதியுதவி வழங்க விரும்புவோர், அறநிலையத் துறை கமிஷனர், தாசில்தார், மாண்டியா அல்லது பெங்களூரில் உள்ள கோவில் நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளும்படி அறிக்கை வெளியிட்டுள்ளனர். கோவில் நிர்வாக அதிகாரி தனலட்சுமி கூறுகையில், “கோவிலின் ராஜகோபுரத்தில் கலசம் வைக்க, 50 - 60 லட்சம் ரூபாய் செலவாகும். இரண்டு கலசங்களின் பொறுப்பை, இரண்டு பக்தர்கள் ஏற்றுள்ளனர். மீதமுள்ள மூன்று கலசங்களுக்காக, பொதுமக்களிடமிருந்து நிதியுதவி வசூலிக்கும்படி அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அவசியம் ஏற்பட்டால், கோவிலின் கருவூலத்தில் உள்ள பணத்தை பயன்படுத்திக் கொள்ளும்படியும் தெரிவித்துள்ளார்,” என்றார்.வரவு - செலவு விவரம்ஆண்டு    வருவாய்    செலவு2010- - 11    ரூ.1,00,665,22    ரூ. 57,92,6352011- - 12    ரூ. 1,95,26,471    ரூ. 64,32,8162012- - 13    ரூ. 2,24,79,514    ரூ. 75,78,0182013- - 14    ரூ. 2.73,91,673    ரூ. 91,69,5142014- - 15    ரூ. 2,35,50,492    ரூ. 64,59,095.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !