உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிவாலீஸ்வரருக்கு சோமவார பிரதோஷம்!

ஆதிவாலீஸ்வரருக்கு சோமவார பிரதோஷம்!

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷம் நடந்தது. பிரதோஷத்தை  யொட்டி விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 4:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.  தொடர்ந்து 5:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை, 6:00 மணிக்கு நந்தி சுவாமி ஆலயத்திற்குள் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சி  ஏற்பாடுகளை ஆதிவாலீஸ்வரர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !