புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3791 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, புத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, கொட்டாவூர் கிராமத்தில், புத்து மாரியம்மன் கோவில் மற்றும் நவகிரக கும்பாபிஷேக விழா, கடந்த 27ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து கலசஸ்தாபனம், யாகசால பிரவேசம், முதல்காலயாகம், கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், அன்று இரவு, கோபுரத்திற்கு தானியம் நிரப்புதல், கலசஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நாளான நேற்று, அதிகாலை 5 மணிக்கு இரண்டாம்கால யாக பூஜை, மூலமந்த்ரயாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், காலை 9 மணி அளவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோபூஜை, கன்னிகா பூஜை, விஸ்வரூப தரிசனம், தீபாராதனை நடந்தது. கொட்டாவூர், பழையவூர், கொட்டூர், கம்மம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.