உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வி.சாத்தப்பாடி கோவிலில் ஆனி திருவிழா!

வி.சாத்தப்பாடி கோவிலில் ஆனி திருவிழா!

கம்மாபுரம்: வி.சாத்தப்பாடி வேம்பையனார் கோவில் ஆனி திருவிழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். கம்மாபுரம் அடுத்த வி.சாத்தப்பாடி  வேம்பையனார் கோவில் ஆனி திருவிழா, கடந்த 26ம் தேதி துவங்கியது. தினமும் காலை 8:00 மணிக்கு வேம்பையனார், மாரியம்மன்  சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணியளவில் சம்பூரண ராமாயணம் கதைப்பாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.முக்கிய நிகழ்வாக நேற்று  காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து, இன்று காலை 3:00 மணிக்கு ராமர் சுவாமிக்கு மகுடாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !