உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பூதநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருக்கனுார் : கூனிச்சம்பட்டு காமாட்சி சமேத பூதநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு காமாட்சி சமேத பூதநாதீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, நேற்று முன் தினம் மாலை 6:30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடத்தப்பட்டது.இரவு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராமசுப்ரமணியன் குருக்கள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !