உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் அம்மையகரத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா!

சின்னசேலம் அம்மையகரத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா!

சின்னசேலம்: சின்னசேலம் அருகே அம்மையகரத்தில் மகா மாரியம்மன் தேர் திருவிழா நடந்தது. சின்னசேலம் அருகே அம்மையகரத்தில் மகாமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி முதல் பாரத நிகழ்ச்சி நடந்தது. தினந்தோறும் இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதியுலா நடந்தது.  நேற்று முன்தினம் காலை அலகு குத்துதல் நிகழ்ச்சியுடன் மாலை 5:00 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்பு கிராம மக்கள் தேரை முக்கிய வீதிவழியாக வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். நேற்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழாமுடிவடைந்தது. திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !