உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் மாங்கனித்திருவிழா

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் மாங்கனித்திருவிழா

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் நேற்று இரவு மாங்கனித்திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கு பெற்றனர். மாங்கனித்திருவிழா, என்பது 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார், இறைவன் அருளால், அதிமதுர மாங்கனியை பெற்று, தனது கணவருக்கு வழங்கினார். அவர் மாங்கனி வழங்கியநாளில் மாங்கனித்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. செண்பகவல்லியம்மன் கோயிலில் 63 நாயன்மார்கள் சன்னிதியில் மாங்கனிகள் வரவழைக்கப்பட்டது. மாங்கனிகள் நாயன்மார்களுக்கு படைக்கப்பட்டது. காரøக்கால் அம்மையாருக்கு மா, மஞ்சள், இளநீர்,பால், தயிர், பஞ்சாமிர்தம்,குங்கும் உட்பட 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !