நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்!
கம்பம்: கம்பம் குலாலர் சமுதாய கோடதலையார் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட நல்லம்மாள், நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் ரக்ஷாபந்தனம், வாஸ்துசாந்தி, விமான கலச பிரதிஷ்டை செய்தல், இயந்திர ஸ்தாபனம் செய்தல் நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. நேற்று அதிகாலை அம்பாள் சகஸ்ர நாம அர்ச்சனைகள், அம்பாள் திருமந்திர பூஜைகளுடன் யாக வேள்வி சாலையில் இருந்து புண்ணிய தீர்த்தங்கள் புறப்பட்டது. கலசங்கள் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் வேமந்திரங்கள் முழங்க, பக்தர்களின் கரகோஷத்துடன் கோபுர விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. நல்லம்மாள், நாகம்மாள் சன்னதிகளில் மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளில் பலர் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தை கணேஷ் நடத்தினார். அன்னதானம் நடந்தது. விவசாய சங்க தலைவர் நாராயணன், ரத உற்சவ கமிட்டி தலைவர் நடராஜ், ஒக்கலிகர் சங்க நாட்டாண்மை காந்தவன், ம.தி.மு.க., செயலாளர் ராமகிருஷ்ணன், நகராட்சி தலைவர் சிவக்குமார், கவுன்சிலர் முருகன், இமயம் டிரேடர்ஸ் புவேந்திரன், பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.