உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி கோவிலில் நல்அறிவான் களபலி!

திரவுபதி கோவிலில் நல்அறிவான் களபலி!

விருத்தாசலம்: ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, நல் அறிவான் களபலி உற்சவம் நடந்தது. விருத்தாசலம்  சாத்துக்கூடல் சாலை, ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 12ம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி  அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அம்மன் பிறப்பு, அர்ச்சுணன் வில் வளைப்பு, திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன. 18ம் நாள்  உற்சவத்தையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு கோவிலிலிருந்து ஊர்வலமாக காளி யம்மன் அழைத்து வரப்பட்டு, நல் அறிவான் களபலி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.  வரும் 17ம் தேதி தீமிதி உற்சவம், 19ம்  தேதி தர்மர் பட்டாபிஷேகம், 24ம் தேதி காலை பால்குட ஊர்வலம், அன்றிரவு திருவிளக்கு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !