உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையில் ஆனித்தேரோட்டம் கோலாகலம்!

நெல்லையில் ஆனித்தேரோட்டம் கோலாகலம்!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலின் 507வது தேரோட்டம் இன்று காலை விமரிசையாக துவங்கியது. தமிழகத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயில் பரப்பளவில் மிகப்பெரியதாகும். இங்குள்ள தேர் தமிழகத்தின் முக்கிய தேர்களில் ஒன்றாக விளங்குகிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித்தேரோட்டம் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் ஆனித்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிசேக,அலங்காரங்கள், வீதி உலா நடந்தது. இன்று 12ம் தேதி அதிகாலை 4 மணியளவில் சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி வீதிவுலா வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !