உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமலிங்கசுவாமி கோயிலில் குரு பெயர்ச்சி யாகம்

சோமலிங்கசுவாமி கோயிலில் குரு பெயர்ச்சி யாகம்

கன்னிவாடி:குரு பெயர்ச்சியை முன்னிட்டு கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. மெய்கண்ட சித்தர் குகைபீடம், சோமலிங்கசுவாமி, ஓம்கார விநாயகருக்கு சோடஷ அபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, நாகாபரண அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூலவர், உற்சவர், நந்திக்கு 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. பழங்களைக்கொண்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, தேவார, திருவாசக பாராயணத்துடன் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. * தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயில், காரமடை ராமலிங்க அடிகளார் மடம் உள்ளிட்ட இடங்களிலும் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சியையொட்டி, பக்தர்கள் யாக பொருட்கள் வழங்கி பரிகார பூஜையில் பங்கேற்றனர். வடமதுரை பாலமுருகன் கோயிலும் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு யாகம், பரிகார பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !