உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது.இரவு 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், குருபரிகார சாந்தி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடாகி 10:45 மணிக்கு குருபகவானுக்கு மகா அபிஷேகம் நடந்தது.இரவு 11:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் குருபகவானுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !