கெங்கையம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :3749 days ago
புதுச்சேரி: அரவிந்தர் வீதி கெங்கையம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சேரி அரவிந்தர் வீதி விஜயகணபதி, பாலமுருகன், கெ ங்கையம்மன் கோவில் பிரமோற்சவ விழா மற்றும் கும்பாபிஷேக 2ம் ஆண்டு நிறைவு விழா கடந்த 26ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷே பூர்த்தி விழா நடந்தது. நேற்றிரவு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.