திருவண்ணாமலையில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்!
ADDED :3757 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தட்சணாயன புண்ணிய கால பிரம்மோற்சவம் எனும் ஆனி பிரம்மோற்சவ தொடக்க விழாவை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோவில் தங்கக்கொடி மரத்தில், வேத மந்திரங்கள் முழுங்க சிவாச்சாரியார்கள் கொடி ஏற்றினார். தங்கக்கொடி மரத்தின் முன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு, உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், பாரசக்தியம்மன் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.