அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
தியாகதுருகம் : தியாகதுருகம் அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், திருப்பணி வேலைகள் நடந்தது. படுத்த நிலையில் 20 அடி உயர அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டது. மூலவர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார் சரவணன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு கோபூஜை மற்றும் நாடிசந்தானம் செய்து முடிக்கப்பட்டது. முற்பகல் 11:00 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து 11:15 மணிக்கு புனித நீரை அம்மன் சிலை மீது தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.சமுதாயபராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, செல்வராஜ், ரங்கராஜ், பிச்சாண்டிபிள்ளை, சங்கர், ராதாகிருஷ்ணன், சுகுமார், சுந்தர், கண்ணன், சடையாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.