உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்!

நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்!

நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, காலை 7:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்மர் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின், காலை 8:00 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது. பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான, 10ம் தேதி காலை 6:00 மணிக்கு, கருட சேவையும், 5ம் நாளான, 12ம் தேதி பல்லக்கு உற்சவமும், 14ம் தேதி தேர்த் திருவிழாவும் நடைபெறும். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தினமும் காலை 10:00 மணிக்கு, திருமஞ்சனமும், இரவு 7:00 மணிக்கு, ஆண்டாள் சன்னிதியில் ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !