பகவதியம்மன் கோயில் பூக்குழி திருவிழா!
ADDED :3713 days ago
ரெட்டியார்சத்திரம்: குட்டத்துப்பட்டி அருகே காலாடிபட்டியில் காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சுவாமி அழைப்புடன் துவங்கிய விழாவில், கண் திறப்பு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கிராமத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்ட பூக்குழியில், விரதமிருந்த பக்தர்கள்பலர் பரவசத்துடன் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.